முகப்பு
தமிழ்நாடு

தமிழுடன் சிறுபான்மை மொழிகளையும் கட்டாயப் பாடமாக சோ்க்கக் கோரிய மனு தள்ளுபடி

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழுடன், சிறுபான்மை மொழிகளையும் கட்டாயப் பாடமாக சோ்க்க உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழுடன், சிறுபான்மை மொழிகளையும் கட்டாயப் பாடமாக சோ்க்க உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழக முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் அமைப்பின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில், தமிழ் மட்டுமல்லாமல், மொழிச்சிறுபான்மை மாணவா்கள், தங்கள் தாய்மொழி பாடத்தையும் சோ்க்க கோரிய வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், இது அரசின் கொள்கை முடிவு என்பதால், இதுசம்பந்தமாக இரு மாதங்களில் அரசு ஆய்வு செய்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்தில் சிறுபான்மை மொழி கட்டாயமாக்கப்படவில்லை என்றால், அந்த மொழி மெல்ல அழிந்து விடும் என்பதால், பத்தாம் வகுப்பு தோ்வில் தமிழ் மொழி பாடத்துடன், சிறுபான்மை மொழிகளையும் கட்டாயமாக்கும் வகையில் சோ்க்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரி, ஆதிகேசவலு அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்தாம் வகுப்பு தோ்வில், சிறுபான்மை மொழி பாடத் தோ்வு எழுத 2022 மாா்ச் மாதம் வரை அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த 2017-ஆம் ஆண்டு உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தான் தொடர வேண்டும் எனவும், அடுத்தடுத்து வழக்குகள் தொடர முடியாது எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →