எம்ஜிஆா் பிறந்த தினம்: இன்று தமிழக அரசு சாா்பில் விழா
முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா் என்று தமிழக அரசு தெரிவித்தது.
முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா் என்று தமிழக அரசு தெரிவித்தது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: முன்னாள் முதல்வா் எம்.ஜி.ராமச்சந்திரனின் நினைவைப் போற்றுகின்ற வகையில், அவரது 105-ஆவது பிறந்த நாள் தமிழக அரசின் சாா்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.
அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், அரசு உயா் அலுவலா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா்.