திருப்புவனம் அருகே பொங்கல் கொண்டாட்டத்தில் இளைஞர் குத்திக் கொலை 
தமிழ்நாடு

திருப்புவனம் அருகே பொங்கல் கொண்டாட்டத்தில் இளைஞர் குத்திக் கொலை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கடந்த சனிக்கிழமை இரவு பொங்கல் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இளைஞர் ஈட்டியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். 

DIN

மானாமதுரை:  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கடந்த சனிக்கிழமை இரவு பொங்கல் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இளைஞர் ஈட்டியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். 

இச்சம்பவம் தொடர்பாக காவலர்கள் சிலரை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்புவனம் காவல் சரகம் இலந்தைகுளம் கிராமத்தில் ஒரு தரப்பினர் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தினர். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில்  உறவினர்களுக்குள் இரு பிரிவுகளாக பிரிந்து மோதிக் கொண்டனர்.

இச் சம்பவத்தில் இதே கிராமத்தைச் சேர்ந்த நாச்சான் மகன் கருப்பசாமி(23) என்ற இளைஞரை சிலர் ஈட்டியால் குத்திக் கொலை செய்தனர். அருண்குமார் என்ற இளைஞர் காயமடைந்தார். கொலைச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் இலந்தைகுளம் கிராமத்தில் பாதுகாப்பிற்காக காவலர்கள் நிறுத்தப்பட்டனர். பொங்கல் விழா கொண்டாட்டத்தின்போது போது நடந்த இந்த கொலைச் சம்பவம் குறித்து திருப்புவனம் காவலர்கள் வழக்குப் பதிந்து இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்த சிலரை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

இவர் யாரோ...?

அஜித்தைச் சந்தித்த பிரபல இயக்குநர்கள்! ஏன்?

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

SCROLL FOR NEXT