முகப்பு
தமிழ்நாடு

வடுகப்பட்டியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா

சேலம் புறநகர் மாவட்டம், சங்ககிரி கிழக்கு ஒன்றியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி கிராமத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 105-வது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 

Updated On : 17 ஜனவரி, 2022 at 1:34 PM
மலர்தூவி மரியாதை செலுத்துகிறார் வடுகப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் ஜி.முத்துசாமி.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:39 PM


சேலம் புறநகர் மாவட்டம், சங்ககிரி கிழக்கு ஒன்றியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி கிராமத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 105-வது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 

சங்ககிரி கிழக்கு ஒன்றியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி கிராமத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு வடுகப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் ஜி.முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவியம், தேங்காய், பழம் உடைத்து வைத்து கற்பூரம் காட்டி வழிபட்டனர்.  

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். வடுகப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தலைவர் இ.அங்கப்பன், முன்னாள் ஊராட்சி செயலர் ஜெ.ராமசாமி, கிளைச் செயலர் ஆர்.குமார், கே.பிரபாகரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.