முகப்பு
தமிழ்நாடு

மறைமலைநகர் அருகே 2 மகள்களுடன் தந்தை கிணற்றில் குதித்து தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே குடும்ப தகராறில் தந்தை தனது 2 மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ்நாடு

மறைமலைநகர் அருகே 2 மகள்களுடன் தந்தை கிணற்றில் குதித்து தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே குடும்ப தகராறில் தந்தை தனது 2 மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே குடும்ப தகராறில் தந்தை தனது 2 மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மறைமலைநகர் அருகே ஆட்டோ ஓட்டுனர் இருமகள்களுடன் கிணற்றில் பிரேதமாக மீட்கப்பட்டனர். விசாரணையில் சென்னை புதுப்பேட்டை பச்சையப்பன் முதலி தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஞானவேல்(44) இவர் மனைவி ஜெயந்தி (38) இவர்களுக்கு ஐஸ்வர்யா( 5) பூஜா (3) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். 

இந்நிலையில் குடும்ப தகராறில் ஞானவேல் கடந்த ஜனவரி 15ந் தேதி தனது இருமகள்களுடன் ஆட்டோவில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவர் மனைவி ஜெயந்தி எழும்பூர் காவல் நிலையத்தில்  ஜனவரி 18ந் தேதி செவ்வாய்க்கிழமை தனது கணவர் குழந்தைகளுடன் சென்றவர் காணவில்லை எனப்  புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் புதன்கிழமை செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் கடம்பூர் எனும் கிராமத்தில் விவசாயக் கிணறு அருகே ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருப்பதாகவும் அருகில் சென்று பார்த்தபோது அங்குள்ள விவசாய தரை கிணற்றில் இறந்த நிலையில் 2 சிறுமிகளுடன் ஒரு நபர் இறந்த நிலையில் மிதப்பதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல்  தெரிவித்தனர். 

தகவலையடுத்து மறைமலைநகர் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதங்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் எழும்பூரில் காணாமல் போன ஞானவேல் என்பதும் சிறுமிகள் இவரது இரண்டு மகள்கள் என்பதும் தெரியவந்தது.

தந்தை ஞானவேலுடன் மகள்கள் இருவரும் கட்டிப்பிடித்தபடி பிரேதமாக நீரில் மிதந்த நிலையில் குடும்ப பிரச்னை காரணமாகத் தற்கொலை செய்து இருக்கலாம் என்கிற கோணத்தில் மறைமலைநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →