முகப்பு
தமிழ்நாடு

மேக்கேதாட்டு விவகாரம்: ஒசூர் எல்லையில் விவசாயிகள் போராட்டம்

ஓசூர் அருகே கர்நாடக - தமிழக எல்லையில் மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை தடுத்த நிறுத்தக் கோரி புதன்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
ஒசூர் எல்லையில் விவசாயிகள் போராட்டம்
பகிர்:

ஒசூர்: ஓசூர் அருகே கர்நாடக - தமிழக எல்லையில் மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை தடுத்த நிறுத்தக் கோரி புதன்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநில எல்லைப் பகுதியில் மேகதாது அணை கட்ட வலியுறுத்தி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நடத்தும் பாதயாத்திரை ஆர்ப்பாட்டத்தை கண்டித்து, அதைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் ,காவேரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் மறைமுக சுழற்சியை கைவிட்டு தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட அனுமதித்திட  வேண்டும், மேகதாது அணை கட்ட  கர்நாடகாவிற்கு வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய கொடுத்த அனுமதியை திரும்பப் பெற்றிட வேண்டும், என வலியுறுத்தி ஓசூரில் பேரணி நடத்தி பின்னர் மாநில எல்லையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இதில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளரரும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பிஆர் பாண்டியன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →