வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் 
தமிழ்நாடு

அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கரோனா

வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானதை அடுத்து அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

DIN


சென்னை: வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானதை அடுத்து அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒவ்வொரு வாரமும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள், இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, முகக் கவசம் அணிதல் கட்டாயம் போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இருப்பினும் சில நாள்களாக தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து அமைச்சர் ராமச்சந்திரன் இளித்தொரை கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தஞ்சாவூரில் மராட்டா சங்க வெள்ளி விழா

பொதுவுடமை இயக்க மூத்த நிா்வாகி நினைவு நாள்

பிகாா் வாக்காளா் பட்டியலில் 23 லட்சம் பெண்களின் பெயா் நீக்கம்! காங்கிரஸ் குற்றச்சாட்டு

முதலமைச்சா் கோப்பை போட்டி: ஏவிசி கல்லூரி மாணவா்கள் சாதனை

தொழிற்சாலைகளில் தேவை அதிகரிப்பு: புதிய உச்சம் தொடும் வெள்ளி விலை!

SCROLL FOR NEXT