தமிழ்நாடு

பெரியகுளம் நீர்ப்பிடிப்பு பகுதியில் சட்டவிரோதமாக 500 லாரி மண் எடுப்பு: விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

பெரியகுளம் நீர்ப்பிடிப்பு பகுதியில் சட்டவிரோதமாக 500 லாரிகளில் மண் எடுத்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சத்தியமங்கலம் நகராட்சி  எல்லைக்குட்பட்ட பெரியகுளம் நீர்த்தேக்கப்பகுதியில் க.ச எண் 110ல் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. மலைமுகடுகளில் பெய்யும் மலைநீர் இந்த தடுப்பணையில் நிரம்புவதால் பெரியகுளம் பகுதியில் உள்ள 100க்கும் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் ஆர். முருகேசன் என்பவர் தடுப்பணை நீர்ப்பிடிப்பு பகுதியில் சுமார் 500 லாரி வண்டல் மற்றும் கிராவல் மண் எடுத்ததாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து இன்று சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயி சங்கத்தினர் ஆர்ப்பட்டம் நடத்தினர். 

அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிதியை மீறி மண் அள்ளிய கிராம நிர்வாக அலுவலர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கக்கோரியும் தடுப்பணையை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை நீக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் கோஷமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டேன்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT