தமிழ்நாடு

‘கல்லூரி பருவத் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும்’: அமைச்சர் பொன்முடி

DIN

கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இணையவழியாக நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

கரோனா மூன்றாம் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“கல்லூரி தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறாது எனக் கூறியிருந்தோம். ஆனால், தற்போதைய சூழலில் நேரடியாக நடத்த வேண்டுமானால் நாள்கள் தள்ளிப் போகும் என்பதால் ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளிலும் பிப்ரவரி 1 முதல் 20ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும்.

பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பின்னர், கரோனா சூழலை பொறுத்து சுகாதாரத்துறை அறிவுரையின்படி நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கான இறுதி பருவத் தேர்வு சுழற்சி முறையில் கட்டாயம் நேரடியாக மட்டுமே நடைபெறும்.

ஆன்லைன் தேர்வில் முறைக்கேடு நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கு மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

மேலும், பாடத்திட்டங்கள் புதுப்பிக்கும் பணி கல்வியாளர்களின் அறிவுரையின்படி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT