தமிழ்நாடு

தமிழகத்தில் 30 ஆயிரத்தை நெருங்கியது கரோனா பாதிப்பு

DIN

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் 1,54,282 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 29,870 பேருக்கு தொற்று உறுதியானது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் 1,87,358 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி, இன்று மட்டும் சென்னையில் 7,038 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 3,653 பேரும், செங்கல்பட்டில் 2,250 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மற்றொருபுறம் மேலும் 21,684 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு இன்று வீடு திரும்பியுள்ளனா்.

இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 48,163 -ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 33 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,145-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT