தமிழ்நாடு

கனிமச் சுரங்கங்களை ட்ரோன் மூலமாக கண்காணிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

DIN

தமிழகம் முழுவதும் கனிமச் சுரங்கங்களின் நடவடிக்கைகளை ட்ரோன் மூலமாக கண்காணிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சுண்ணாம்புக் கல் எடுக்கச் செலுத்தும் உரிமத் தொகையை அதிகரித்த அரசு உத்தரவை எதிர்த்து சிமெண்ட் ஆலை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

மதுக்கரை ஏசிசி சிமெண்ட் தயாரிப்பு நிறுவன வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது பேசிய நீதிபதி, 'சுரங்கங்கள், கனிமங்கள் நம் நாட்டின் செல்வங்கள். பேராசை கொண்ட சிலர்  அநியாய லாபத்திற்காக தேசத்தின் செல்வங்களை சுரண்டுவதை  அனுமதிக்க முடியாது. 

தமிழகம் முழுவதும் கனிமச் சுரங்கங்களின் நடவடிக்கைகளை ட்ரோன் மூலமாக கண்காணிக்க வேண்டும். சுரங்கங்களுக்கு உரிமத்தொகை நிர்ணயிக்க ட்ரோன் மூலம் அளவிட வேண்டும்

தொழில் வளர்ச்சியை ஆதரிக்கும் அதேநேரத்தில் தேசத்தில் செல்வமும், பொதுநலனும் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT