மன்னார்குடியில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுகவினர் . 
தமிழ்நாடு

மன்னார்குடியில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காத திமுக அரசை கண்டித்தும். உடனடியாக விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கிட வலியுறுத்தி மன்னார்குடியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

DIN


மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அண்மையில் பெய்த கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காத திமுக அரசை கண்டித்தும். உடனடியாக விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கிட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மன்னார்குடி மேல ராஜவீதி தந்தை பெரியார் சிலை அருகில் அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சிவா ராஜமாணிக்கம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது .

அதிமுக நகரச் செயலர் ஆர். ஜி. குமார் , மன்னார்குடி ஒன்றிய செயலர் கா. தமிழ்ச்செல்வம், கோட்டூர் ஒன்றியச் செயலர் வீ.ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஜெ .பேரவை மாவட்டச் செயலர் பொன். வாசுகிராம், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் டி. மனோகரன், கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ். கலைவாணன், மாவட்ட மகளிரணி தலைவர் டி. சுதா, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்டத் துணைச் செயலாளர் ஏ. புவனேஸ்வரி, நகர அவைத்தலைவர் டி. வரலட்சுமி, முன்னாள் நகரச் பெயலர் என்.சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT