முகப்பு
தமிழ்நாடு

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி நீடாமங்கலம், வலங்கைமானில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத தமிழக அரசைக் கண்டித்தும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிடக் கோரியும் நீடாமங்கலத்தில் அதிமுகவினர் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
நீடாமங்கலத்தில் அதிமுகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம். 
பகிர்:


நீடாமங்கலம்: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத தமிழக அரசைக் கண்டித்தும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிடக் கோரியும் நீடாமங்கலத்தில் அதிமுகவினர் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

மாவட்ட ஜெ.பேரவைச் செயலாளர் பொன்.வாசுகிராம் தலைமை வகித்தார். நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், ஜனகர், துணைச்செயலாளர் நடராஜன், நகர செயலாளர்கள் நீடாமங்கலம் ஷாஜஹான், கொரடாச்சேரி செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் அரிகிருஷ்ணன், மாநிலபொதுக்குழு உறுப்பினர் தவமணி இளங்கோவன், மாவட்ட ஜெ பேரவை துணைச் செயலாளர் செந்தமிழ்ச்செல்வன், நகர எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பெரியதம்பி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் பலரும் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவினர் கோஷங்களை எழுப்பினர். 

வலங்கைமானில் அதிமுகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.

இதேபோல் வலங்கைமானில் முன்னாள் எம்.பி. கோபால் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒன்றிய செயலாளர்கள் சங்கர், இளவரசன், நகர செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் அதிமுகவினர் திரளாக கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.