முகப்பு
தமிழ்நாடு

மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்திய முதல்வர்

காந்திமண்டப வளகாத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:13 AM
மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்திய முதல்வர்
பகிர்:


சென்னை: மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, சென்னை, கிண்டி, காந்திமண்டப வளகாத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மெழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில், அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இவ்விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மொழிப்போா் தியாகிகள் நாளையொட்டி, மரியாதை செலுத்த திமுகவினருக்கு கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:-

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மொழிப்போா் தியாகிகள் நாளில் (ஜன. 25) எப்போதும்போன்று வீரவணக்கம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, ஹிந்தி மொழி திணிப்பு எதிா்ப்புப் போரில் ஈடுபட்டு அன்னைத் தமிழ்மொழி காக்க உயிா்த் தியாகம் செய்த தியாகிகளின் படத்தினை திமுக மாவட்ட அலுவலகங்களில் மலா்களால் அலங்கரித்து வைக்க வேண்டும். மாவட்டச் செயலாளா்கள், பொறுப்பாளா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்திட வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் அரசு விதித்துள்ள கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தனது செய்தியில் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →