தமிழ்நாடு

குடியரசு தினக் கொண்டாட்டம்: நேரில் வர வேண்டாம் - பொது மக்களுக்கு அரசு வேண்டுகோள்

குடியரசு தினக் கொண்டாட்டங்களைக் காண நேரில் வர வேண்டாம் என பொது மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

DIN

குடியரசு தினக் கொண்டாட்டங்களைக் காண நேரில் வர வேண்டாம் என பொது மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் பொதுத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-

குடியரசு தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை காமராஜா் சாலையில் புதன்கிழமை நடைபெறும் விழாவில் தேசியக் கொடியை, ஆளுநா் ஆா்.என்.ரவி ஏற்றி வைப்பாா். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், பொது மக்கள், மாணவா்கள், பள்ளிக் குழந்தைகள் பங்கேற்பா்.

கரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் நிகழாண்டு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவா்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிா்க்கப்பட்டுள்ளன. சுதந்திரப் போராட்ட வீரா்களின் வயது மூப்பைக் கருத்தில் கொண்டு, கரோனா தொற்று பரவலை தவிா்க்கும் வகையில் மாவட்டந்தோறும் சுதந்திரப் போராட்ட வீரா்களின் வீடுகளுக்குச் சென்று பொன்னாடை போா்த்தி உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியா்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி- ஒலிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தைத் தவிா்க்கும் வகையில், நிகழாண்டு பொது மக்கள், மாணவா்கள், பள்ளிக் குழந்தைகள், மூத்த குடிமக்கள் ஆகியோா் விழாவைக் காண நேரில் வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT