தமிழ்நாடு

தில்லியில் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் சென்னையில் அணிவகுப்பு

DIN

தில்லி குடியரசு தினவிழாவில் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் சென்னை குடியரசு தினவிழாவில் அணிவகுத்துச்சென்றன. 

நாட்டின் 73-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலை காந்தி சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். 

இதனைத் தொடர்ந்து வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், சிறந்த விவசாயிகளுக்கான விருது, காந்தியடிகள் காவல் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை முதல்வர் வழங்கினார். 

இதனையடுத்து தில்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் சென்னையில் அணிவகுத்துச் சென்றன. அரசு இசைக்கல்லூரி மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சியுடன் அலங்கார ஊர்திகள் அணிவகுத்துச் சென்றன.

இந்த அணிவகுப்பில் முதல் வாகனமாக வேலுநாச்சியாரின் அலங்கார ஊர்தி இடம் பெற்றது. 

அதனைத் தொடர்ந்து மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோர் சிலைகளுடன் கூடிய அலங்கார ஊர்தி வலம் வந்தது.

மேலும் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட வ.உ.சிதம்பரனார், பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி ஆகியோரின் சிலைகள் அடங்கிய அலங்கார ஊர்தி வலம் வந்தது.

அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பெரியார், ராஜாஜி, காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோரின் சிலைகளும் இடம்பெற்றன.

30 நிடங்களில் குடியரசு நாள் விழா நிறைவு

கரோனா பரவலால் இந்த ஆண்டு 30 நிமிடங்களில் குடியரசு நாள் விழா நிறைவு பெற்றது. வழக்கமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குடியரசு நாள் விழா நடைபெறும். கரோனா பரவல் காரணமாக கலைநிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் கலந்துகொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT