தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுக நாளை ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து மு.க. ஸ்டாலின் தலைமையிலான கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

DIN


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையிலான கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டது. பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் பிப்ரவரி 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுபற்றி துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 27-1-2022 வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெறும். 

அதுபோது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

SCROLL FOR NEXT