தமிழ்நாடு

இரவுநேர ஊடரங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து: முதல்வர்

DIN


தமிழ்நாட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இரவுநேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 7-ம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, முதல்வர் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  

இதில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை (30-1-2022) முழு ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

SCROLL FOR NEXT