நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை: அரசாணை வெளியீடு 
தமிழ்நாடு

நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்களை விற்பனை செய்வது தொடர்பாக தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

DIN


சென்னை: தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்களை விற்பனை செய்வது தொடர்பாக தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளிடமிருந்து சிறுதானியங்களாக ராகி, கம்பு, திணை, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை கொள்முதல் செய்து, சென்னை, கோவை மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.

விவசாயிகளின் வருவைய அதிகரிக்கவும், சிறு தானியங்களின் மதிப்பைக் கூட்டவும், இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, சிறுதானியங்களின் விலையை நிர்ணயம் செய்ய கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் குழு அமைத்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதற்கட்டமாக சென்னை மற்றும் கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாக  இத்திட்டததை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT