தமிழ்நாடு

தமிழ்த் தாய் வாழ்த்து சர்ச்சை: வருத்தம் தெரிவித்தது ரிசர்வ் வங்கி

DIN

தமிழ்த் தாய் வாழ்த்துக்கு ரிசர்வ் வங்கி அலுவலர்கள் எழுந்து நிற்காததற்கு ரிசர்வ் வங்கி தரப்பில் தமிழக அரசிடம் வியாழக்கிழமை வருத்தம் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்று குடியரசு நாள் விழா நடைபெற்றது. விழாவின்போது, தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு ரிசர்வ் வங்கியில் சில அலுவலர்கள் எழுந்து நிற்கவில்லை என வாக்குவாதம் ஏற்பட்டது.

ரிசர்வ் வங்கி அலுவலர்களின் இந்த செயலுக்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சென்னை காவல்துறையினரிடம் ஆன்லைன் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்த ரிசர்வ் வங்கியின் மண்டல மேலாளர் எஸ் எம் சாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து நேற்று நடந்த சம்பவம் குறித்து இன்று மாலை விரிவான அறிக்கை வெளியிடப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT