தமிழ்நாடு

பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிராக மனு: ஜன. 31-க்கு ஒத்திவைப்பு

DIN

சென்னை பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மேலும் இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 

சென்னை ஈஞ்சம்பாக்கம் அடுத்த பெத்தேல் நகர் பகுதி, நீர்நிலை பகுதியில் கட்டி இருப்பதாக சேகர் என்பவர் தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த 2019ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழக அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் தொடரப்பட்டதை 
அடுத்து கடந்த வாரம் விசாரணையில், 'பாரபட்சமின்றி அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். தமிழக அரசு இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிமன்றம் கூறியது. 

இதையடுத்து, '1,000-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன் 1,007 நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 65 சுற்றுச்சுவர்களும் இடிக்கப்பட்டுள்ளது' என தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில், சென்னை பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மேலும் இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி தமிழக அரசும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற ஜனவரி 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

இதனிடையே, பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருவதால் தங்களுக்கு பட்டா வழங்ககோரியும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் முடிவை கைவிடக்கோரியும் பெத்தேல் நகர் பகுதி மக்கள் தொடர்ந்து 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT