தமிழ்நாடு

பண்ணாரி சோதனைச்சாவடியில் ரூ. 18 லட்சம் மதிப்பிலான போதைப்பாக்குகள் பறிமுதல்; இருவர் கைது

DIN

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடியில் கர்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்பிலான போதைப்பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். 

தமிழக - கர்நாடக எல்லையான பண்ணாரி சோதனைச்சாவடியில் போதைப்பாக்குகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சத்தியமங்கலம் போலீசார் கர்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்தனர். 

அப்போது மைசூரில் இருந்து  வந்த கர்நாடக பிக் அப் வேன்களை சோதனை செய்தபோது காலிபிளவர் மூட்டைகளுக்குள் போதைப்பாக்குகள் கடத்திவது தெரியவந்தது.

இது தொடர்பாக பிக் அப் வேனில் வந்த  மைசூரைச் சேர்ந்த ஓட்டுநர் பிரசன்னா,(30) சுதி என்கிற சுதாகர்(30) ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில் காலிபிளவர் காய்கறி லாரியில் போதைப் பாக்குகளை மறைத்து கடத்துவது தெரியவந்தது.

இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் இரண்டு பிக் அப் வேன்களையும் பறிமுதல் செய்து சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் வைத்து ஆய்வு செய்தனர்.

அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, வி.ஒன். பாக்குகள் மற்றும் கணேசா பாக்குகள் என 75 மூட்டைகளில் ரூ.18 லட்சம் மதிப்பிலான சுமார் 2.2 டன்(2,250 கிலோ) போதைப்பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. குட்கா கடத்தல் தொடர்பாக பண்ணாரி சோதனையில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT