தமிழ்நாடு

மதுரை வந்த குடியரசு தின அலங்கார ஊர்திக்கு உற்சாக வரவேற்பளித்த சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை வந்த குடியரசு தின அலங்கார ஊர்திக்கு சு.வெங்கடேசன் எம்.பி. உற்சாக வரவேற்பு அளித்தார். 

DIN

மதுரை வந்த குடியரசு தின அலங்கார ஊர்திக்கு சு.வெங்கடேசன் எம்.பி. உற்சாக வரவேற்பு அளித்தார். 
தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பு என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஊர்தியில் இடம்பெற்றிருந்த சுதந்திரப் போராட்ட தலைவர்கள் மற்றும் வீரர்களின் வரலாற்று பெருமையை புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொண்டுள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும் குற்றம் சுமத்தினர். 

இதையடுத்து, விடுதலைப் போரில் தமிழகம் என்ற இந்த அலங்கார ஊர்தியை சென்னையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த அலங்கார ஊர்தியானது கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பெருநகரங்களில் காட்சிக்கு எடுத்துச் செல்லப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். 
அதன்படி, மதுரை வந்த அலங்கார ஊர்திக்கு சு.வெங்கடேசன் எம்.பி. உற்சாக வரவேற்பு அளித்தார். 
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், 
இது எங்கள் தேர் !
சுதந்திரப் பெருந்தேர் !
விடுதலைப்போரினை முன்னெடுத்த மாவீரர்களை சுமந்து வரும் திருத்தேர்.
தமிழ் வலம்பிடிக்கும் தனிப்பெருந்தேரை 
மாமதுரையின் சார்பில் வரவேற்று மகிழ்ந்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கழிப்பறையில் ஹேண்ட் டிரையர்களைப் பயன்படுத்த வேண்டாம்! ஏன்?

2-வது ஒருநாள்: சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா; ஆஸி.க்கு 293 ரன்கள் இலக்கு!

பிரிட்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

உரைவேந்தரின் உரைமாட்சி

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

SCROLL FOR NEXT