தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்வது குறித்து அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக மாவட்டச் செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT