தமிழ்நாடு

தேமுதிக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தேமுதிக சார்பில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

முன்னதாகதமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தேர்தல் ஒரேகட்டமாக பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 4 ஆம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 25 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT