தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையங்களிலேயே இணையவழிப் பதிவு: நுகர்பொருள் வாணிபக் கழகம்

DIN


சென்னை: விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்களிலேயே இணையவழியில்  பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ளது.

இணையவழியில் நெல் கொள்முதலை பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொண்டதால் நுகர்பொருள் வாணிபக் கழகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அடங்கல் ஆவணம், ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களை விவசாயிகள் அளித்தால், நெல் கொள்முதல் நிலையங்களிலேயே இணையவழியில் பதிவு செய்யப்பட்டு, டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில், விவசாயிகளிடமிருந்து நெல்கொள்முதல் செய்யவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் உழவா்கள் பயன்பெறுவதை உறுதி செய்யும் வகையில் இணைய வழி பதிவு முறையை அக்டோபா் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

அதன்படி, தமிழகத்தில் உழவா்கள் தங்களது பெயா், ஆதாா் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களை எளிய முறையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும், கொள்முதல் செய்ய வேண்டிய நாளினைத் தெரிவித்து முன்பதிவு செய்து, நெல்லை விற்பனை செய்து பயன்பெறும்படியும் கேட்டுக் கொண்டது.

ஆனால், விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் செய்வதை இணையவழியில் முன்பதிவு செய்வது என்பது இயலாத காரியம் என்பதாலும், இணையவழியில் முன்பதிவு செய்தில் பல்வேறு சிக்கல்கள் நீடித்த நிலையில், அதனை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தப்பட்டன நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT