தமிழ்நாடு

சேலம்: அதிமுக நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

DIN

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியல் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேறிய நிலையில் சேலம் உட்பட பல மாநகராட்சி களுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் நகராட்சி களுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னதாக வேட்பாளர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்தும் மலர் கொத்து வழங்கியும் வாழ்த்து பெற்றனர்.  தொடர்ந்து பிரசார வியூகம் வெற்றி பெறுவதற்கான வழிவகைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT