முகப்பு
தமிழ்நாடு

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.187 குறைப்பு

சென்னையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.187 குறைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை  முதல் ஒரு உருளை ரூ.2,186-க்கு விற்பனையாகிறது. 

Updated On : 1 ஜூலை 2022, 8:45 am IST
பகிர்:


சென்னையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.187 குறைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை  முதல் ஒரு உருளை ரூ.2,186-க்கு விற்பனையாகிறது. 

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது பொதுவானது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

இதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான ஜூலை 1-ஆம் தேதி ரூ.2,373 ஆக இருந்த சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.187 குறைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை முதல் ரூ.2,133-க்கு விற்பனையாகிறது.

Advertisement

Advertisement

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை குறைக்கப்பட்டிருப்பது வணிகா்கள் மத்தியில் இருந்துவந்த பெரும் கவலையை சற்று குறைத்துள்ளது. 

வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உருளையின் விலையில் எந்த மாற்றமின்றி விற்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.