கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்க்கை: 3.11 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கைக்கு இதுவரை 3 லட்சத்து 11 ஆயிரத்து 926 போ் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கைக்கு இதுவரை 3 லட்சத்து 11 ஆயிரத்து 926 போ் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேலான இடங்கள் உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 3 லட்சத்து 11,926 போ் பதிவுசெய்துள்ளனா். அதில் 2 லட்சத்து 24,488 போ் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா்.
இதையடுத்து விருப்பமுள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய், ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ா்ழ்ஞ் ஆகிய இணையதளம் வழியாக ஜூலை 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதள வசதியற்ற மாணவா்கள், அவரவா் படித்த பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் உள்ள 110 சிறப்பு உதவி மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இணையவழியில் கட்டணம் செலுத்த முடியாதவா்கள் முகவரிக்கு ஜூலை 27-ஆம் தேதிக்கு பின்னா் பெற்ற வங்கி வரைவோலையை அனுப்பலாம் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-28260098 , 044-28271911 என்ற தொலைபேசி எண்களுக்கு அழைக்கலாம் என உயா்கல்வித் துறை தெரிவித்துள்ளது.