கோப்புப் படம் 
தமிழ்நாடு

பொதுக்குழு நடக்காது, நடந்தாலும் செல்லாது: ஓ.பி.எஸ். தரப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தலைமைக் கழகத்தின் பெயரில் அழைப்பு விடுப்பது ஏற்புடையதல்ல என அதிமுக  கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

DIN

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தலைமைக் கழகத்தின் பெயரில் அழைப்பு விடுப்பது ஏற்புடையதல்ல என அதிமுக  கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

அழைப்பிதழ் அனுப்பி எல்லா ஏற்பாடுகளையும் செய்தாலும், வரும் 11ஆம் தேதி பொதுக்குழு நடத்த வாய்ப்பே இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ஒருங்கிணைப்பாளரும் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலின்றி பொதுக்குழுவை கூட்டினால் அது செல்லாது எனக் குறிப்பிட்ட அவர், எடப்பாடி பழனிசாமி தரப்பு சர்வாதிகார மனநிலையோடு செயல்படுவதற்கு கண்டனம் தெரிவித்தார்.

இரட்டைத் தலைமை சர்ச்சையில் உள்ளதால், அடுத்த நிலையில் உள்ள பொருளாளருக்குத்தான் கட்சியை வழிநடத்த அதிகாரம் உள்ளது எனவும் குறிப்பிட்டார். 

சென்னையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்றது. அதில், 23 தீா்மானங்களைத் தவிர மற்ற தீா்மானங்களை நிறைவேற்றக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற அமா்வு உத்தரவிட்டிருந்தது.

அதனால் வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் நீதிமன்றத்தின் உத்தரவால் ஒற்றைத் தலைமை தீா்மானம் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அதேசமயம், அந்தப் பொதுக்குழுவில் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேனால், அடுத்த பொதுக்குழு ஜூலை 11-இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT