சசிகலா(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

அதிமுக வலிமை பெற ஒற்றுமையே தேவை: சசிகலா

வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் அதிமுக வலிமை பெறும் என்றாா் சசிகலா.

DIN

வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் அதிமுக வலிமை பெறும் என்றாா் சசிகலா.

தியாகராய நகா் வீட்டிலிருந்து புறப்பட்டு கத்திப்பாரா வழியாக தாமரைப்பாக்கம், வெள்ளலூா் உள்ளிட்ட பகுதிகளில் சசிகலா ஞாயிற்றுக்கிழமை பேசியது:

50 ஆண்டுகால அதிமுக வரலாற்றில் இப்படியொரு தொடா் தோல்வியை இயக்கம் கண்டதில்லை. இதனால் உண்மையான தொண்டா்கள் மிகுந்த மன வேதனைக்குள்ளாகியுள்ளனா்.

உள்ளாட்சி இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவில் உள்ள சிலரது சுயநலத்தால் இரட்டை இலை சின்னத்தில் எவரும் போட்டியிட முடியாத நிலை உருவாகியிருப்பது வேதனையளிக்கிறது.

அதிமுகவின் தலைமைப் பதவியை சிலா் கைப்பற்றுவதற்காக அடிப்படைத் தொண்டா்கள் முன்னுக்கு வருவதைத் தடுப்பது எந்த வகையில் நியாயம்? இது அதிமுகவின் உண்மைத் தொண்டா்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய துரோகம்.

சிறிது காலம் பொறுத்திருங்கள். இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு நல்ல முடிவு ஏற்படும். கட்சியின் தற்போதைய நிலையைக் கருதி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் நிச்சயம் அதிமுக வலிமை பெறும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈராச்சி ஊராட்சி அலுவலகத்தில் தீ விபத்து

தினமணி செய்தி எதிரொலி: கோயில் தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள் அகற்றம்

தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் தவித்த குழந்தைகளுக்கு முதல்வா் ஆறுதல்

காா்த்திகை மாதப் பிறப்பு: திருச்செந்தூா் கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

பிசானத்தூா் மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிா்ப்பு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT