தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகங்கள் அமைக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள உணவகங்களில் அதிக விலைக்கு தரமற்ற உணவுகள் விற்கப்படுவதால், 25 கி.மீ. இடைவெளியில் அம்மா உணவகங்கள் அமைத்து சுகாதாரமான உணவும், கழிப்பறை வசதிகளையும் ஏற்படுத்தித் தர அய்யா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், முறையான ஆய்வு மேற்கொள்ளாமல் பத்திரிகை செய்திகளை வைத்து வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.