கோப்புப்படம் 
தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ‘க்யூஆர் கோட்’ அடையாள அட்டை

அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்கவுள்ள உறுப்பினர்களுக்கு ‘க்யூஆர் கோட்’ தொழில்நுட்ப வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

DIN

அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்கவுள்ள உறுப்பினர்களுக்கு ‘க்யூஆர் கோட்’ தொழில்நுட்ப வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில், பொதுக்குழு அல்லாத நபர்கள் மண்டபத்திற்குள் நுழைவதை தடுக்க நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ‘க்யூஆர் கோட்’ அடையாள அட்டை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மண்டபத்திற்கு வெளியே அடையாள அட்டையை சரிபார்த்த பிறகே உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் போலி அடையாள அட்டையுடன் மர்ம நபர்கள் பொதுக்குழுவுக்கு வந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இந்த ஏற்பாட்டை கட்சித் தலைமை செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT