தமிழ்நாடு

பாஜக இரட்டை வேடம் போடுவதை நிறுத்த வேண்டும்: கே.எஸ்.அழகிரி

DIN

பாஜக இரட்டை வேடம் போடுவதை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: திமுக வழங்கிய 505 வாக்குறுதிகளை டிசம்பா் 31- ஆம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை பாத யாத்திரை நடத்தப்போவதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை அறிவித்துள்ளாா். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட ரூ.5.5 லட்சம் கோடி கடனை சுமந்து கொண்டு தான் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றாா். அத்தகைய கடன் சுமையின் பின்னணியில் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகளில் பாதிக்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆனால், 2014 தோ்தல் பரப்புரையில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என்று பிரதமா் மோடி வாக்குறுதி வழங்கினாா். ஆனால், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் தற்போது தலைவிரித்தாடி வருகிறது. ஒரே நாடு, ஒரே வரி என்று கூறி 5 கட்ட விரி விதிப்பை அமல்படுத்தி தவறான ஜி.எஸ்.டி. மூலம் மக்களை பாஜக அரசு கசக்கிப் பிழிந்து வருகிறது. அதனால், திமுக ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை. தமிழகத்தில் மக்கள் பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்துகிறோம் என்று கூறி இரட்டை வேடம் போடுவதை தமிழக பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT