மானாமதுரை அருகே வேதியரேந்தலில் அரவை ஆலையில் பதுக்கபபடடு போலீசார் கைப்பற்றிய ரேஷன் அரிசி மூட்டைகள். 
தமிழ்நாடு

மானாமதுரை அருகே 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஆலை உரிமையாளர் கைது

மானாமதுரை அருகே அரிசி அரவை ஆலையில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆலை உரிமையாளரை மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

DIN

 
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே புதன்கிழமை அரிசி அரவை ஆலையில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆலை உரிமையாளரை மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

மானாமதுரை அருகே வேதியரேந்தல் கிராமத்தில் உள்ள தனியார் அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து சார்பு ஆய்வாளர் கணேச லிங்கபாண்டி தலைமையில் போலீசார் அந்த அரிசி ஆலையை சோதனையிட்டனர். அப்போது அங்கு 300 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் பாலிஷ் செய்யபப்ட்ட ரேஷன் அரிசி என 19 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் இந்த அரிசி மூடைகளை கைப்பற்றினர். ஆலை உரிமையாளர் ஜெயராமன் மற்றும் கார்த்திக், ராஜா, சக்தி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜெயராமனை கைது செய்துள்ளனர்.

வேதியரேந்தல் கிராமத்தில் போலீசார் சோதனையிட்ட அரிசி அரவை ஆலை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனுஷி படம் பார்த்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்! சில காட்சிகளை நீக்க உத்தரவு!

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

SCROLL FOR NEXT