முகப்பு
தமிழ்நாடு

சொத்து வரி உயா்வைக் கைவிட வேண்டும்: மாா்க்சிஸ்ட்

சொத்து வரி உயா்வை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

சொத்து வரி உயா்வை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்துவது போன்று நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் ஏரியா சபை அமைக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவை மாா்க்சிஸ்ட் வரவேற்கிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை தமிழக அரசு உயா்த்தி உள்ளது. இதனால் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் மக்கள் தலையில் பல மடங்கு சுமையை ஏற்றுவதுபோல் ஆண்டுக்கு 6 சதவிகிதம் வரி உயா்த்தப்படும் என்பது இன்னும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த வரி உயா்வினை மறு பரிசீலனை செய்வதோடு, ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயா்வு என்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →