தமிழ்நாடு

செங்கல்பட்டு அருகே பேருந்தும் லாரியும் மோதி விபத்து: 6 பேர் பலி

செங்கல்பட்டு அருகே பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர். 

DIN


செங்கல்பட்டு அருகே பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர். 

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அச்சரப்பாகம் அடுத்த தொழுப்பேடு அருகே சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்றுகொண்டிருந்து கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் இருந்து பயணிகளில் 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்து, காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்தின் ஒரு பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது.  

விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT