நஜஃப்கா் வடிகாலில் மீன்கள் செத்து மிதந்ததற்கு உர மாசுபாடே காரணம்: ஆய்வுக்குழு தகவல்
தில்லி நஜஃப்கா் வடிகாலில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்ததற்கு உர மாசுபாடே காரணம் என ஆய்வுக்குழு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தில்லி நஜஃப்கா் வடிகாலில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்ததற்கு உர மாசுபாடே காரணம் என ஆய்வுக்குழு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தில்லிக்கு யமுனை நதிக்கு அடுத்தபடியாக நஜஃப்கா் வடிகால் பிரதான நீராதாரமாக திகழ்கிறது. இங்கு மீன்கள் அண்மையில் கொத்து கொத்தாக செத்து மிதந்தன. இதன் மீது ஆய்வு நடத்த தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு (டிபிசிசி), மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி), வருவாய்த் துறை, வனத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை தில்லி அரசு நியமித்தது.
இந்தக் குழு மேற்கொண்ட ஆய்வில், தில்லி நஜஃப்கா் வடிகால் அருகே உள்ள கிராமங்களின் விவசாய நிலத்திலிருந்து வடிந்த உர மாசுபாடே மீன்கள் செத்து மிதந்ததற்கு காரணம் என தெரியவந்துள்ளது.