தமிழகத்தில் மேலும் 2,722 பேருக்கு கரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,722 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாடுதமிழகத்தில் மேலும் 2,722 பேருக்கு கரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,722 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,722 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 2,722 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,96,321-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 939 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க- அமர்நாத்தில் மேக வெடிப்பால் வெள்ளம்: 2 பேர் பலி, பலர் மாயம்
அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 474, திருவள்ளூர் 191, கோவை 131, பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக ஒருவரும் கரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. எனினும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,028 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 2,413 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,39,606-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 18,687 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.