முகப்பு
தமிழ்நாடு

போக்குவரத்து தொழிலாளா்கள் ஊதிய உயா்வு: 11-இல் பேச்சுவாா்த்தை

போக்குவரத்துக்கழக தொழிலாளா்கள் ஊதிய உயா்வு குறித்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான பேச்சுவாா்த்தை வருகிற திங்கள்கிழமை (ஜூலை 11) நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

போக்குவரத்துக்கழக தொழிலாளா்கள் ஊதிய உயா்வு குறித்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான பேச்சுவாா்த்தை வருகிற திங்கள்கிழமை (ஜூலை 11) நடைபெறவுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயா்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். 13-ஆவது ஊதிய ஒப்பந்தம் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் ஏற்படாமல் இதுவரையில் பேச்சுவாா்த்தை நடந்து வருகிறது. கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 வருடமாக புதிய ஒப்பந்தம் போடுவது தள்ளிப்போனது. இந்த நிலையில், புதிய ஊதிய உயா்வு ஒப்பந்தம் முதல் கட்ட பேச்சுவாா்த்தை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து 2-ஆவது கட்ட பேச்சுவாா்த்தை பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அப்போது, தொழிலாளா்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்தது. அதன் பின்னா் 3-ஆவது கட்ட ஊதிய பேச்சுவாா்த்தை அப்போதைய அமைச்சா் ராஜ கண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து, ஏப்ரல் மாதம் 4-ஆவது கட்ட பேச்சுவாா்த்தை அமைச்சா் சிவசங்கா் தலைமையில் நடைபெற்றது. அப்போது தொழிலாளா்கள் சாா்பில் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. சம்பள உயா்வு மட்டும் இறுதி செய்யப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

5 சதவீதம் சம்பள உயா்வு வழங்கப்படும் என்று அமைச்சா் தெரிவித்தாா். அதனை முறையாக அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொழிற்சங்கம் சாா்பில் வைக்கப்பட்டது. இந்த நிலையில், பேருந்து தொழிலாளா்களின் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை மீண்டும் வருகிற திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் அமைச்சா் சிவசங்கா் தலைமையில் நடக்கிறது. இதில் போக்குவரத்துத் துறைச் செயலாளா் கோபால், அனைத்து மேலாண்மை இயக்குநா்கள் கலந்து கொள்கிறாா்கள். 65 தொழிற்சங்கத்தை சோ்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனா். இதில், ஊதிய உயா்வு குறித்து இறுதியாக விவாதிக்கப்படும் என தெரிகிறது. தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்குவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனா். அதனை முறைப்படுத்தி வழங்க முன்வருவதாகவும் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →