தமிழ்நாடு

பொதுக்குழு: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். தனித்தனியாக ஆலோசனை

DIN

அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை கூடவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கவுள்ள நிலையில், ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

இதேபோன்று செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, காமராஜ் உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதில், பொதுக்குழு ஏற்பாடுகள், நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொள்வது குறித்து ஆதரவாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் தீர்மானங்கள் முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை. இதனால் நாளை (ஜூலை 11) மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. பொதுக்குழுவில் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேசமயம் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது வரும் 11ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT