தமிழ்நாடு

தஞ்சை மாரத்தானில் மா.சுப்பிரமணியன்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தஞ்சை  வல்லத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் அமைச்சர்  மா.சுப்ரமணியன் உள்ளிட்ட  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

DIN

தஞ்சை  வல்லத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் அமைச்சர்  மா.சுப்ரமணியன் உள்ளிட்ட  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

5 கிலோ மீட்டர் தூரம், 10 கிலோ மீட்டர் தூரம், 20 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

போதைப்பொருள் ஒழிப்பு சட்டவிரோத கடத்தலை தடுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து போட்டியினை தொடங்கி வைத்தனர்.

ஐந்து கிலோமீட்டர், பத்து கிலோமீட்டர், 20 கிலோ மீட்டர் பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்த்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

மேலும்  20 கிலோமீட்டர் பிரிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மேயர் ராமநாதன் கலந்து கொண்டு ஓடினார்கள். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கமும், சான்றிதழ்களும்  வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு வெற்றி: தினப்பலன்கள்!

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

SCROLL FOR NEXT