தமிழ்நாடு

துரோகம் செய்த ஓபிஎஸ் இனி கட்சிக்கு தேவையா?

துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வம் இனி கட்சிக்கு தேவையா? என முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆவேசமாக பொதுக்குழு உறுப்பினர்களை பார்த்து கேள்வி எழுப்பினார். 

DIN


துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வம் இனி கட்சிக்கு தேவையா? என முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆவேசமாக பொதுக்குழு உறுப்பினர்களை பார்த்து கேள்வி எழுப்பினார். 

அதிமுக பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என சொல்லி எம்ஜிஆர் புன்னகையோடு, ஜெயலலிதாவின் நிர்வாக திறமையோடு செயல்படுபவர் எடப்பாடி பழனிசாமி. 

ஏழை, எளிய மக்களின் தொண்டனாக இருப்பவர். திமுகவை எதிர்க்கும் வலிமை மிக்க தலைவர் எடப்பாடியார் தான். திமுகவை எதிர்க்கும் தமிழகத்தின் ஒரே தலைவராக எடப்பாடியார் இருப்பதால் அவருக்கு இந்த இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்கு பிறகு பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார். 

பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுக்க நினைத்தவர்கள் தலைமைக் கழகத்தின் பூட்டை உடைத்து உள்ளே செல்கிறார் என்றால் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் உண்மையான தொண்டனா?. இந்த இயக்கத்தை அழித்துவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். இவ்வளவு துரோகம் செய்தவர் இனி அதிமுகவுக்கு தேவையா? என அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் சிந்திக்க வேண்டும் என ஆவேசமாக பேசிய தங்கமணி, எடப்பாடியாரை முதல்வராக்க தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என கூறினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT