கோப்புப்படம் 
தமிழ்நாடு

தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்திக்கிறேன்: ஓபிஎஸ்

தலைமை அலுவலகத்தில்  தொண்டர்களை சந்திக்கிறேன் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: தலைமை அலுவலகத்தில்  தொண்டர்களை சந்திக்கிறேன் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் பொதுக்குழுவிற்கு வானகரம் செல்லும் நிலையில்,  ஓ. பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் இருந்து  ராயபேட்டை அதிமுக தலைமை அலுவலகம் புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு தனது ஆதாரவாளர்களை சந்திக்க உள்ளார்.

இன்று காலைமுதல் அதிமுக தலைமை அலுவலகம் பூட்டியுள்ள நிலையில் ஓ. பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் இருந்து  புறப்பட்டு சென்றுள்ளார்.

பொதுக்குழு நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் கோட்டை வடிவில் பிரம்மாண்டமான முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் பதாகைகள் வெளிப்புறப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை பொதுக்குழு நடைபெற்றபோது ஓ.பன்னீா்செல்வத்தின் பதாகையும் வைக்கப்பட்டிருந்தது. இந்த முறை ஓ.பன்னீா்செல்வம் பதாகை வைக்கப்படவில்லை.

மண்டபத்தின் உள்ளே செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்களுக்குத் தனித்தனியே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தலைவா்கள் அமரும் மேடை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“VIJAY தேவையான விளக்கத்தை அளித்துள்ளார்! மீண்டும் ஆஜராவார்!” தவெக நிர்மல் குமார்

ராமராஜன் - கனகா சந்திப்பு!

அரிய வகை நட்சத்திர ஆமை மீட்பு!

தில்லியில் ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் சீனாவின் ஆளுங்கட்சியினர் சந்திப்பு!

ஊர்க்காவலர் பணியில் திருநங்கைகள்! பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர்!

SCROLL FOR NEXT