தமிழ்நாடு

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் என்ன சிரமம்? நீதிமன்றம்

DIN


சென்னை: ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பொன்னேரியில் பாயும் ஆரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் எதுவும் அகற்றப்படாமலேயே பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டதாக ஆனந்தன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, ஆக்கிரமிப்புகள் எனத் தெரிந்தும் அவற்றை அகற்றுவதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது.

ஒவ்வொரு ஆக்கிரமிப்புக்கும் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுதான் அகற்றுவீர்களா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு தமிழக அரசு சார்பில், ஆக்கிரமிப்புகள் அனைத்தும் முறையாக நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்புகள் என்று தெரிந்தால், அவற்றை அகற்ற தமிழக அரசு தயங்குவதில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT