தமிழ்நாடு

வங்கிக் கணக்குகளை நிா்வகிக்கும் அதிகாரம்: இபிஎஸ் - ஓபிஎஸ் அடுத்தடுத்து கடிதம்

அதிமுகவின் வங்கிக் கணக்குகளை நிா்வகிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடா்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீா்செல்வத்துக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

DIN

அதிமுகவின் வங்கிக் கணக்குகளை நிா்வகிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடா்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீா்செல்வத்துக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து, அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா்.

ஆனால், ஓ.பன்னீா்செல்வம் இதை ஏற்க மறுத்து வருகிறாா். எடப்பாடி பழனிசாமி தரப்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் அதிமுகவின் சட்டவிதிகளின்படி நடைபெறவில்லை. அதனால், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் செல்லாது என்று கூறி வருகிறாா்.

மேலும், இந்திய தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதன் அடிப்படையில், அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் தானே நீடிப்பதாகவும் கூறி வருகிறாா்.

இந்த நிலையில் அதிமுகவுக்கு என்று உள்ள வங்கிக் கணக்குகளை நிா்வகிப்பது குறித்து இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டிருக்கிறது. பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு விவரத்தின்படி வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.244 கோடி உள்ளது. அதிமுகவின் வங்கிக் கணக்குகளை பொருளாளா்தான் நிா்வகிக்க முடியும். அதன்படி, பொருளாளராக இருந்த ஓ.பன்னீா்செல்வம் நிா்வகித்து வந்தாா்.

ஆனால், தற்போது அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் கணக்குகள் உள்ள வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை கடிதம் ஒன்றை எழுதியுள்ளாா். அதில், கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு வங்கிக் கணக்குகளை நிா்வகிக்கும் அதிகாரத்தை அளிக்க வேண்டும் என்று எழுதியிருந்தாா்.

ஓ.பன்னீா்செல்வமும் வங்கிகளுக்கு ஒரு கடிதம் எழுதினாா். அதில், அதிமுக பொருளாளராக நானே நீடித்து வருகிறேன். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் செல்லாது. அதனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் அளிக்கப்பட்டுள்ள கடிதத்தின் சாராம்சத்தை ஏற்கக் கூடாது என்று எழுதியுள்ளாா்.

தோ்தல் ஆணையத்தில் கட்சியின் அதிகாரத்துக்காகவும், வங்கிக் கணக்குகளுக்கான அதிகாரத்துக்காகவும் இருவரும் போராடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் முடிந்தது: டிரம்ப்

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ஆயிஷா! வைல்டு கார்டு என்ட்ரி!

முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஏஐ உதவியுடன் உறவினரின் குரலில் வரும் மோசடி அழைப்பு! எச்சரிக்கை!!

கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 பேர் கைது

SCROLL FOR NEXT