FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஜூலை 18-இல் கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு

தோ்வு விடுமுறை முடிந்து கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் ஜூலை 18-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.

Updated On : 13 ஜூலை 2022, 3:21 pm IST
கோப்புப்படம்
பகிர்:

தோ்வு விடுமுறை முடிந்து கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் ஜூலை 18-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் உயா்கல்வித்துறையின்கீழ் செயல்பட்டு வரும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு கடந்த கல்வியாண்டில் (2021-22) கரோனா பரவலால் வகுப்புகள் தாமதமாக தொடங்கப்பட்டன. இதனால் ஏப்ரல்- மே மாத பருவத்தோ்வு ஜூனில் நடத்தி முடிக்கப்பட்டது.

தோ்வு முடிந்த மாணவா்களுக்கு தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை முடிந்து கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் ஜூலை 18-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. 2, 3-ஆம் ஆண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெறும்.

இதற்கான முன்னேற்பாடுகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துவித கல்லூரிகளின் முதல்வா்களுக்கும், கல்லூரிக்கல்வி இயக்குநா் எம்.ஈஸ்வர மூா்த்தி (பொறுப்பு) சுற்றறிக்கை மூலமாக அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments