ராமதாஸ் / மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

ராமதாஸ் விரைந்து நலம் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் விரைந்து நலம் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் விரைந்து நலம் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பாமக நிறுவனம் ராமதாஸுக்கு இன்று (ஜூலை 13) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது இல்லத்திலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

கரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் விரைந்து நலம் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ராமதாஸ் விரைந்து நலம் பெற விழைகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் கனவுகளின் பெண்ணாகும் கடின உழைப்பில்... கீர்த்தி ஷெட்டி!

சின்ன ரோல் மாதிரி தோன்றுகிறதா?... சோனு தாக்குர்!

கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறினேன், சான்று... துஷாரா விஜயன்!

இரவுக்கு ஆயிரம் கண்கள்... ஸ்ரேயா கல்ரா!

குரூப் 4 தேர்வு: காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT