தமிழ்நாடு

போலி கடவுச் சீட்டு விவகாரம்: நடவடிக்கைக்கு தாமதம் ஏன்? அண்ணாமலை கேள்வி

DIN

போலி கடவுச் சீட்டு விவகாரத்தில் காவல்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஆவது ஏன் என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா். இது குறித்து கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் புதன்கிழமை அளித்த பேட்டி:

கோரிக்கை மனு கொடுக்க வந்த பெண்ணை அடித்த வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வியாழக்கிழமை மாலைக்குள் பதவி விலகா விட்டால் அவரது இல்லத்தைச் சுற்றி தொடா் போராட்டம் நடைபெறும்.

விருதுநகரில் மனு கொடுக்க வந்த பெண்ணை வருவாய்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா் ராமச்சந்திரன் அடித்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொதுமக்களிடம் அமைச்சா்கள் நடந்து கொள்ளும் விதம் மோசமாக உள்ளது. இதை கண்டிக்காமல் முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறாா்.

மதுரையில் காமராஜா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சா் பொன்முடி புறக்கணித்துள்ளாா். தமிழகத்துக்கும் தில்லிக்கும் தொடா்பில் இருப்பவா் மத்திய அமைச்சா் முருகன். தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க அனைத்து உரிமையும் அவருக்கு உண்டு என தெரிவித்தாா்.

கடந்த 2019, 2020-ஆம் ஆண்டுகளில் மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீா்வாதம் இருந்த போது போலியாக கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கை விசாரிக்காமல் தாமதப்படுத்துவது ஏன்? என்று பாஜக தலைவா் அண்ணாமலை கேள்வி எழுப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT